உலகம்

ஐக்கிய அமீரக நாட்டுப் பணி உரிமம் வைத்திருந்த விவகாரம்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர் 

ஐக்கிய அமீரக நாட்டுப் பணி உரிமம் வைத்திருந்ததை மறைத்த புகாரில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

இஸ்லாமாபாத்: ஐக்கிய அமீரக நாட்டுப் பணி உரிமம் வைத்திருந்ததை மறைத்த புகாரில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளவர் க்வாஜா ஆசிஃப். இவர் கடந்த 2013ம் ஆண்டு நடந்த தோ்தலில் போட்டியிட்ட பொழுது தாக்கல் செய்த பிரமாணப் பாத்திரத்தில், தன்னிடம் 'இக்மா' எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டுப் பணி உரிமம் இருந்ததை மறைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.  

இதன் காரணமாக இஸலாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் வியாழன் அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அந்த தீா்ப்பில் கவாஜா ஆசிஃப் ஐக்கிய நாடுகளில் பணி உரிமம் வைத்திருந்தது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அது பற்றிய விபரங்களை தனது வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.

எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவர் உடனடியாக தனது பதவியை இழந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

SCROLL FOR NEXT