உலகம்

நடுத்தெருவில் பொதுமக்களுடன் நடனமாடிய அதிபர்: கின்னஸ் சாதனை ருசிகர நிகழ்வு 

DIN

ஜகார்தா: தங்கள் நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், நடுத்தெருவில் பொதுமக்களுடன் இந்தோனேசிய அதிபர் நடனமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.   

இந்தோனேசிய நாட்டில் 2018-ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு  போட்டிகள் வரும் ஆகஸ்டு 18-ந்தேதி  துவங்கி, செப்டம்பர் 2-ந்தேதி வரை  நடைபெற உள்ளன.  இந்த போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு உலக சாதனைக்காக அந்நாட்டின் தெருக்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் ஒன்று கூடி, 'போகோ போகோ' என்னும் பாரம்பரிய  நடனம் ஆடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடபெறச் செய்யவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அதன்படி ஆயிரக்கணக்கானோர் வரிசையாக ஜகர்த்தா நகரின் தெருக்களில் கூடி நின்று நடனம் ஆடினர். இதனை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள 500 சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் கைதிகளும் இந்த நடனத்தினை ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது. .

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவும் கலந்து கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து நடனம் ஆடியாது பரவலான கவனத்திற்குள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT