உலகம்

தென்கொரியா: பள்ளிகளில் காபிக்குத் தடை

DIN


தென் கொரியப் பள்ளிகளில் காபி விற்பனை செய்யப்படுவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, அந்த நாட்டுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களது காபி தேவைக்கு புதிய வழிமுறைகளைத் தேட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் மாணவர்களுக்கு அதிக அளவில் காஃபைன் கொண்ட காபி விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. தானியங்கி காபி இயந்திரங்களில் ஆசிரியர்கள் பயன்படுக்காக மட்டும் அந்த வகை காபி இதுவரை கிடைத்து வந்தது. எனினும், அதனை மாணவர்களும் வாங்கிப் பருகி வந்தனர். எனவே, மாணவர்களுக்கு அதிக காஃபைன் கொண்ட காபி கிடைப்பதற்கான வாய்ப்பைத் தவிர்ப்பதற்காக, அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் அந்த வகை காபியை பள்ளிகளில் விற்பனை செய்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT