உலகம்

சிரியாவில் தொடர் வான்வழித் தாக்குதல்: 194 பேர் பலி

DIN

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், அப்பாவி பொதுமக்கள் 194 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
சிரியாவுக்கு கிழக்கே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கௌட்டா பகுதியில் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுவரையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 194 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 57 சிறுவர்களும் அடங்குவர்.
குறிப்பாக, கடந்த திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 37 சிறுவர்கள் உள்பட 127 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கௌட்டா நகரில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிக மோசமான தாக்குதலாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 
சிரியாவில் டமாஸ்கஸை ஒட்டியுள்ள கௌட்டா நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இதனை மீட்க, சிரிய அதிபர் அல்-அஸாத் தலைமையிலான படைகள் தீவிரமாக போராடி வருகின்றன.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தும்போது பொதுமக்கள் பலியாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போது காணப்படும் இந்த சூழல் நிலைமை கைமீறிப் போவதை உணர்த்துவதாக உள்ளது என ஐ.நா. சபை. எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரையில் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT