உலகம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு

DIN

சிட்னி: பப்புவா நியூ கினியா தீவில் நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியில் சுமார் 90 கிலோ மீட்டர் (55 மைல்) தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 7.5 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சீரானது. தீவிலுள்ள சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் சேத விவரங்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT