உலகம்

சவூதியில் கால்பந்து விளையாட்டை ரசிக்க பெண்களுக்கு முதல் முறையாக அனுமதி

DIN

சவூதி அரேபியாவில் முதல் முறையாக கால்பந்து போட்டியைக் காண பெண்களுக்கு வெள்ளிக்கிழமை அனுமதியளிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சவூதியின் இளவரசராக முகமதுபின் சல்மான் கடந்த ஆண்டு பதவியேற்றுக் கொண்டது முதல் அவர்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. முதலில், பெண்கள் கார்கள் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. 
அதன் தொடர்ச்சியாக தற்போது, கால்பந்து போட்டியை காண பெண்களுக்கு அனுமதி முதல் முறையாக அனுமதியளிக்கப்பட்டது. இதனை சர்வதேச மகளிர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. 
சவூதி அரேபிய அரசின் இந்த முடிவையடுத்து, ஜெட்டா பேர்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற கால்பந்து போட்டியை கண்டு ரசிக்க பெண்கள் தங்களது குடும்பத்துடன் திரண்டு வந்தனர். அவர்களில் பலர் கருப்பு கண்ணாடி மற்றும் தளர்வான முகத்திரைகளை அணிந்து போட்டிகளை கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT