உலகம்

இரட்டை கார் வெடிகுண்டுத் தாக்குதல்: லிபியாவில் 27 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் புதனன்று நடந்த இரட்டை கார் வெடி குண்டு தாக்குதலில்.  22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

பெங்காஸி: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் புதனன்று நடந்த இரட்டை கார் வெடி குண்டு தாக்குதலில்.  22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று லிபியா. லிபியாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் பெங்காஸி. அங்குள்ள புகழ்பெற்ற உள்ளூர் மசூதி ஒன்றில்தான் இந்த கார் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மசூதி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு முதலில் வெடிக்கச் செய்யப்பட்டது. பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

அடுத்தடுதது நடந்த இரட்டை வெடி குண்டு தாக்குதல்களில் 27 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT