உலகம்

இலங்கையில் காவலர் கொலை: பெளத்த துறவி கைது

DIN

இலங்கையில் காவலரைக் கொலை செய்ததாக, பெளத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியான ரத்னபுராவில் உள்ள கலாண்டா கோவிலில் கொன்வாலனே தம்மசார தேரா என்ற பெளத்த துறவி தனியாக வசித்து வந்தார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய அவருக்கு நீதிமன்றம் பல முறை அழைப்பாணை அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, காவலர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தனியாகச் சென்றுள்ளார். அப்போது, காவலருடன் வர மறுத்த தேரா, அவரோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். திடீரெனக் காவலரின் கழுத்தை நெறித்து, அவரை தேரா கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது.
காவலரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர்,தேராவைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். பெளத்த துறவி ஒருவர், காவலரைக் கொலை செய்திருப்பது இதுவே முதல்முறை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT