உலகம்

பெண் கல்வி மறுக்கப்படுவதால் ரூ.2,000 லட்சம் கோடி இழப்பு!: உலக வங்கி

DIN


பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி டாலர் முதல் (ரூ.1,000 லட்சம் கோடி) 30 லட்சம் கோடி டாலர் (ரூ.2,000 லட்சம் கோடி) வரை இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில், பெண்கள் கல்விக்காகப் போராடி, சிறுமியாக இருக்கும்போது தலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்டு, பிறகு உயிர் பிழைத்தவர் மலாலா.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அவரை கெளரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான ஜூலை 12-ஆம் தேதியை மலாலா தினமாக' ஐ.நா.கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் மலாலா தினமான வியாழக்கிழமை, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறைந்த வருமானம் உள்ள நாடுகளில், மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவான சிறுமிகளே ஆரம்பப் பள்ளிகள் சேர்க்கப்படுகின்றனர். மேலும், மூன்றில் ஒரு சிறுமியே கீழ்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
12-ஆம் வகுப்பு வரை ஒரு பெண்ணுக்கு கல்வி அளிக்கத் தவறுவதால், மனிதவள மூலதன சொத்து மதிப்பில் இழப்பு ஏற்படுகிறது.
அந்த இழப்பு, உலகம் முழுவதும் 15 லட்சம் கோடி டாலர் முதல், 30 லட்சம் கோடி டாலர் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT