உலகம்

கனடாவின் டொராண்டோ நகரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: சிறுமி உட்பட ஒன்பது பேர் காயம்  

கனடாவின் டொராண்டோ நகரில் உணவகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  சிறுமி உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்

IANS

டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உணவகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  சிறுமி உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின் டொராண்டோ நகருக்கு அருகில் அமைந்துள்ள பகுதி கிரீக்டவுன். இங்குள்ள டான்போர்த் அவன்யூ  என்ற இடத்தில் புகழ்பெற்ற உணவகம் ஒன்று உள்ளது. இந்த உணவகத்தில் ஞாயிறு இரவு 10 மணி அளவில் கருப்பு உடை அணிந்த மர்ம நபர் ஒருவன் உள்ளே புகுந்தான். அவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் 15 ரவுண்டுகள் வரை கண்மூடித்தனமாக சுட்டான். இதில் அங்கே இருந்தவர்களில் சிறுமி உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

தகவல் கேட்டு விரைந்து வந்த போலீசார் மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். அத்துடன் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

கூலி ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT