முகப்பு
உலகம்

ஆஃப்கானிஸ்தானில் 34 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 11 ஜூன், 2018 at 7:54 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM

ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

நாங்கர்ஹார் பகுதியில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் பொதுமக்கள் 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை.

அதே நாங்கர்ஹார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 34 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, ஜவஸ்ஜான் பகுதியில் தலிபான் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 7 போலீஸார் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஜூன் 7-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து பயங்கரவாத சம்பவங்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தலிபான் அமைப்பும் ஜூன் 9-ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், தலிபான் அமைப்பு நடத்திய இந்த திடீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஆஃப்கன் அரசு பதிலடி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.