உலகம்

அஜர்பைஜான் போதை மறுவாழ்வு மையத்தில் பயங்கர தீ விபத்து: 30 பேர் பலி! 

DIN

பாகு: அஜர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அஜர்பைஜான் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய ஆசிய கண்டங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் நாடு அஜர்பைஜான். இதன் தலைநகர் பாகு. இங்கு போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் ஒன்று அமைந்திருக்கிறது. இங்கு பல்வேறு வகையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு போதை மீட்பு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மறுவாழ்வு மையத்தில் வெள்ளியன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT