உலகம்

நேபாளத்தில் வங்கதேச பயணிகள் விமானம் கால்பந்து மைதானத்தில் விழுந்து பெரும் விபத்து! 

வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கால்பந்து மைதானம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

DIN

காத்மாண்டு: வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கால்பந்து மைதானம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி வங்கதேச பயணிகள் விமானம் ஒன்று திங்கள் காலை சென்று கொண்டிருந்தது. தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க வேண்டும்.

அவ்வாறு அந்த விமானம் தரையிறங்க முயன்ற பொழுது நிலை தடுமாறி அருகில் இருந்த கால்பந்து மைதானமொன்றில் விழுந்து விபத்துக்குளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் 67 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானம் உடனடியாகத் தீப்பற்றி எரியத் துவங்கியது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில இருந்து முதல்கட்டமாக 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசாமான வானிலையே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

யெஸ் வங்கியின் 13.1% பங்குகள்: எஸ்பிஐ விற்பனை

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT