உலகம்

ஆப்கானிஸ்தானில் தொடர் தற்கொலைப் படை தாக்குதல்கள்: 6 பேர் உடல்சிதறி பலி 

ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹார் மாகாணத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தொடர் தற்கொலைப் படை தாக்குதல்கள்களில், 6 பேர் உடல்சிதறி பலியாகினர்.

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹார் மாகாணத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தொடர் தற்கொலைப் படை தாக்குதல்கள்களில், 6 பேர் உடல்சிதறி பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ளது ஜலாலாபாத் நகரம். இங்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர்ச்சியாக 4 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.  இந்நகரில் உள்ள சுங்கத்துறை நிதி அலுவலகம் அருகே பிற்பகல் சமயத்தில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன், தனது உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை இயக்கி வெடித்து சிதறினான். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை உயரக் கூடும்  என்று அஞ்சப்படுகிறது. மேலும் நடைபெற்ற மூன்று தாக்குதல்களில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT