உலகம்

பிரம்மாண்டமான திருமணத்துக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய ஹாரி-மேகன் தம்பதி (விடியோ & போட்டோ)

DIN


லண்டன்: பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்ஸார் கோட்டையில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் கடைசி மகனும், இளவரசருமான ஹாரி (33), அமெரிக்காவைச் சேர்ந்த சமூக சேவகரும், நடிகையுமான மேகன் மார்கல் (36) ஆகிய இருவருக்கும், அந்த நாட்டின் விண்ட்ஸார் நகரக் கோட்டையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

உடல் நலக் குறைவு காரணமாக மார்கலின் தந்தை இந்தத் திருமணத்தில் பங்கேற்க முடியாததால், மணமகன் மட்டுமின்றி மணமகளின் தந்தை ஸ்தானத்தையும் இளவரசர் சார்லஸ் இத்திருமணத்தில் ஏற்றுக் கொண்டார்.

இந்தத் திருமணம் அரசு நிகழ்ச்சி இல்லை என்பதால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, எதிக்கட்சித் தலைவர் ஜெரமி கார்பின் உள்ளிட்ட உள்நாட்டுத் தலைவர்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போன்ற சர்வதேச தலைவர்களுக்கும் கூட அழைப்பு விடுக்கப்படவில்லை.

திருமணம் முடிந்ததும், தயாராக இருந்த காரில் ஏறி சாலைகளில் வளம்வந்த இளம் தம்பதி, திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்த்துகளை நேரடியாக பெற்றுக் கொண்டு மீண்டும் தேவாலயம் திரும்பினர்.

இந்த நிலையில், மிகப் பிரம்மாண்டமான திருமணத்தை முடித்துக் கொண்டு நேராக தேனிவுலக்குக் கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வின்டேஜ் ஜாகுவார் காரில், தனது கிவென்சி திருமண உடையை மாற்றிக் கொண்டு ஸ்டெல்லா மெக்கார்ட்னே ஹார்டர்நெக் உடையிலும், ஹாரி கருப்பு டையுடன் ராணுவ உடையிலும் உலா வந்தனர்.

மணமகளின் விரலில், ஹாரியின் தாய் டயானாவின் அழகான பெரிய ஆக்வாமரைன் மோதிரம் அலங்கரித்துக் கொண்டிருந்தது.

அன்று மாலை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண விருந்தில் பங்கேற்பதற்காகவே தம்பதியர் புறப்பட்டனர். இந்த விருந்தில் ஏராளமான முக்கியப் பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர்.
 

சிரிப்பு மழையில் விருந்து நிகழ்ச்சி நனைந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி முழுவதும் தம்பதிகள் கரம் கோர்த்தபடியே இருந்தனர். அவ்வப்போது உணர்ச்சி வயப்பட்ட ஹாரி, யூ லுக்கிங் அமேசிங் என மேகனை பார்த்து சொல்லிக் கொண்டே இருந்தார். யுஎஸ் பாஸ்டர் மைக்கேல் க்யூரி, காதலின் வலிமை பற்றி மிக அழகாக உரையாற்றினார்.

ஏராளமான சர்வதேச பத்திரிகைகளும், இதழ்களும், ஹாரி - மேகன் திருமணம் குறித்து புகைப்படங்களுடன் செய்தி பிரசுரித்து புகழ் சேர்த்தன.

திருமணத்துக்கு வந்து வாழ்த்திய மற்றும் மணமக்களை மனமார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று ராயல் ஃபேமிலியின் டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை, சார்லஸ் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால், மணமக்கள் உடனடியாக தேனிலவுக்கு புறப்படவில்லை  என்றும், விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகே அவர்களது தேனிலவு திட்டமிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஹாரி - மேகன் தங்களது அரசப் பணிகளைத் துவக்கிவிட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஹாரி - மேகன் திருமண வைபவத்தை, தொலைக்காட்சியின் நேரலை வழியாக அமெரிக்காவில் மட்டும் 2.92 கோடி பேர் கண்டு ரசித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT