உலகம்

இந்திய பிரதமர் மோடி அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர்: பாக். முன்னாள் அதிபர் குற்றச்சாட்டு

இந்திய பிரதமர் நரேந்தி மோடி அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரஃப் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

Raghavendran

இந்திய பிரதமர் நரேந்தி மோடி அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரஃப் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் ராணுவத் தளபதியான பர்வீஸ் முஷாரஃப் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்தியாவின் அணு ஆயுத உற்பத்தி குறித்து யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். இந்தியாவின் இந்த தொடர் அச்சுறுத்தல் காரணமாகவே பாகிஸ்தான் அரசும் அணு ஆயுத உற்பத்தியை அதிகப்படுத்தியது. 

பாகிஸ்தான் எப்போதுமே அமெரிக்காவுக்கு விசுவாசமாகத்தான் இருந்துள்ளது. இந்தியாவின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா தடுத்திருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானைப் போன்று அல்லாமல் இந்தியாவிடம் வேறு மாதிரியான அணுகுமுறையை அமெரிக்கா பின்பற்றி வருகிறது. 

இந்திய பிரதமர்களான வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவரிடமும் நான் அமைதி குறித்து பேசியுள்ளேன். இதுதொடர்பாக என்னுடைய திட்டத்தையும் தெரிவித்துள்ளேன். இந்த இரு தலைவர்களும் அமைதியை விரும்பியதால் இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்கள்.

ஆனால் தற்போது நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. இந்தியாவில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தவே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அவர் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பாதவர். எனவே அதற்கு ஒரு முடிவுகட்ட நினைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT