உலகம்

கொழும்பில் அரசியல் பேரணியால் பதற்றம்

DIN

இலங்கையின் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பேரணியால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

நூற்றுக்கணக்கான கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களால் கொழும்பு சாலை முழுவதும் முடங்கியது. அதில் பங்கேற்ற அனைவரும் 'மக்களின் சக்தி' எனும் வாசகம் அடங்கிய பதாகைகளுடன் இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க தொடர வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா வீடு நோக்கி பயணம் மேற்கொண்டனர். ஆனால், இடையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்பேரணி கொழும்பு சுதந்திரச் சதுக்கத்துடன் நின்றது. 

முன்னதாக, இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வந்த நிலையில், திடீரென அதிபர் சிறீசேனா, மகிந்த ராஜபட்சவை பிரதமராக நியமித்த போது அரசியல் சர்ச்சை வெடித்தது.

இதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த போதிலும், மகிந்த ராஜபட்ச பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் அதிபர் சிறீசேனாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறீசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கதான் பிரதமர் என்றும் கூறியிருந்தார்.

இருப்பினும், இலங்கை அரசியலில் அடுத்த திருப்பமாக சிறீசேனாவின் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அந்நாட்டின் புதிய நாடாளுமன்றத் தலைவராக தினேஷ் குணவர்த்தனா பொறுப்பற்றுக்கொண்டார். இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT