உலகம்

டாங்கா: கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தினமணி

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகள் நாடான டாங்காவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
 எனினும் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், நிலநடுக்கம் காரணமாக உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
 நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் அபாயம் நிறைந்த "ரிங் ஆஃப் ஃபயர்' (நெருப்பு வளையம்) என்றழைக்கப்பகும் பகுதியில் டாங்கா தீவுகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT