உலகம்

இலங்கை அரசியலில் தொடரும் அதிரடி: இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்தார் ராஜபட்ச!

DIN

கொழும்பு:  இலங்கை அரசியலில் அனுதினமும் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அவற்றில் அடுத்தகட்ட உச்சமாக தற்போது இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் இணைந்துள்ளார் ராஜபட்ச.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து அதிபர் சிறீசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி நீக்கினார். இதையடுத்து முன்னாள் அதிபர் ராஜபட்சவை பிரதமராக சிறீசேனா நியமித்தார். இதை ரணில் விக்ரமசிங்கவும், நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யாவும் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாக ரணில் அறிவித்தார். இதனால் நாடாளுமன்றத்தை முதலில் முடக்கிய சிறீசேனா, பின்னர் 14ஆம் தேதி கூட்டப்படுவதாக தெரிவித்தார். இருப்பினும், ராஜபட்ச அரசுக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைப்பதில் சந்தேகம் நிலவியது.

 எனவே, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று சிறீசேனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக அறிவித்தார்.

இலங்கை அரசியலில் அனுதினமும் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அவற்றின் அடுத்தகட்ட உச்சமாக, இலங்கை சுதந்திர கட்சியின் முன்னாள் தலைரும், கட்சியின் ஆலோசகராக மட்டும் இருந்துவந்த மகிந்த ராஜபட்ச, அவரது ஆதரவாளர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான 50 பேர் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி, இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
   
ராஜபட்சவின் முடிவு மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என பேசப்படுகிறது. 

கடந்த தேர்தலைப்போல் இந்த முறையும் ஐக்கிய மக்கள் முன்னணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என சிறீசேனா தரப்பும், பொதுஜன பெரமுன-வின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ராஜபட்ச தரப்பும் கூறிவந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து ராஜபட்ச வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT