சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரைக் காணவில்லை: மனைவியின் புகாரால் பரபரப்பு
சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரிஸ்: சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்தவர் மெய்ங் ஹாங்வாய். சீனாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
இன்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வாய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்துகாணவில்லை என்று மனைவி தற்போது புகார் கூறிய இருக்கிறார்.
முன்னதாக 'இன்டர்போல்' அமைப்பில் பணியாற்றிய பொழுதும் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.