உலகம்

சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரைக் காணவில்லை: மனைவியின் புகாரால் பரபரப்பு 

DIN

பாரிஸ்: சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் 'இன்டர்போல்' அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சீனாவைச் சேர்ந்தவர் மெய்ங் ஹாங்வாய். சீனாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச காவல்துறையின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான 'இன்டர்போல்' அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். 

இன்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வாய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில்  மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அவரை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்துகாணவில்லை என்று மனைவி தற்போது புகார் கூறிய இருக்கிறார். 

முன்னதாக 'இன்டர்போல்' அமைப்பில் பணியாற்றிய பொழுதும் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT