முகப்பு
உலகம்

இந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கியது

இந்தோனேஷியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 9 அக்டோபர் 2018, 12:57 am IST
பகிர்:


இந்தோனேஷியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் எம். தோஹிர் திங்கள்கிழமை கூறியதாவது:
சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1944-ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடல்களைத் தேடி எடுப்பதற்கான பணிகளை நிறுத்துமாறு எங்களுக்கு இன்னமும் உத்தரவு வரவில்லை என்றார் அவர்.
இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூவும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன.
இடிபாடுகளில் இன்னும் மீட்கப்படாமல் உள்ள ஏராளமான உடல்கள் அழுகி வருவதால், அந்தப் பகுதிகளில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியைக் கைவிட்டு, அந்தப் பகுதிகளை இடுகாடாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.