உலகம்

இலங்கையில் கைது செய்யப்பட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஜாமினில் விடுதலை 

பெட்ரோலிய அமைச்சக வளாகத்துக்குள் நுழைய முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இலங்கை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க திங்களன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

DIN

கொழும்பு: பெட்ரோலிய அமைச்சக வளாகத்துக்குள் நுழைய முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இலங்கை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க திங்களன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். 

பெட்ரோலிய அமைச்சகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுக்க முயன்ற போது, அமைச்சக வளாக பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். இந்த குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஞாயிறன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சரவையில் பெட்ரோலியம் துறை அமைச்சராக இருந்தவர் அர்ஜூன ரணதுங்க என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி: இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள் மீது அமைச்சரின் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

இலங்கையின் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்காவின் பாதுகாவலர்கள் இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

ரணதுங்காவின் பாதுகாவலர்கள் ஆவணங்களை எடுக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதுகாப்பு தர அதிபருக்கு சபாநாயகர் கடிதம் எழுதிய நிலையில், அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது இலங்கை அரசியலில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய பின்னர் நடைபெற்ற முதல் வன்முறை சம்பவம் இதுவாகும்.   

கைது செய்யப்பட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவை ரூ.5 லட்சம் சொந்த ஜாமீனில் கொழும்பு நீதிமன்றம் திங்களன்று விடுதலை செய்தது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT