பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் தீ விபத்து
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அலுவலகத்தின் 6வது மாடியில் இன்று திடீரென தீ விபத்து நேரிட்டது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அலுவலகத்தின் 6வது மாடியில் இன்று திடீரென தீ விபத்து நேரிட்டது.
இந்த தீ விபத்து நேரிட்டபோது, பிரதமர் அலுவலகத்தில், இம்ரான் கான் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
தீ விபத்து குறித்து இம்ரான் கானுக்கு தெரிவிக்கப்பட்டும் கூட, அவர் உடனடியாக பிற ஊழியர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டுவிட்டு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.
Advertisement
உடனடியாக விரைந்து வந்த மீட்புப் படையினர், தீயை அணைத்து, அங்கிருந்த முக்கியப் பொருட்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.