உலகம்

தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை 

தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

DIN

ரியாத்: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரியத் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் நாடான சவுதி அரேபியாவில் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தீவிரவாதத்துடன் தொடர்புடைய பல்வேறு செயல்களில் ஈடுபட்டதான  குற்றச்சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் அவர்கள் பயங்கரவாத கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றி வந்ததுதெரிந்தது.

அத்துடன் நாட்டின் பாதுகாப்பினை சீர்குலைப்பது மற்றும் குழப்பங்களை விளைவிப்பது ஆகியவற்றின் பொருட்டு மறைமுகமாகச் செயல்படும் தீவிரவாத குழுக்களை அவர்கள் உருவாக்கி வந்ததும் தெரிய வந்தது.

விசாரணையின் முடிவில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தகவலை  சவுதி அரேபிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT