உலகம்

இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களைப் பற்றிய விசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே

DIN


கொழும்பு: இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறன்று 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 310 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெற்றுள்ளனர். எனவே விசாரணைக்கு வெளிநாட்டின் உதவிகளைக் கோரியுள்ளோம். இலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவே உள்ளோம். சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் தொடர்ச்சியாகவே இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினரும், ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் பற்றி விசாரணை நடைபெறும்.

விசாரணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன. உடனடி பாதுகாப்பு நிலையைக் கவனத்தில் கொண்டே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நியூசிலாந்து தாக்குதலின் பதிலடியாகக் கூட இலங்கை தாக்குதல் இருக்கலாம். ஆனால் அது பற்றி விசாரணை நடத்தும் காவல்துறையினர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT