உலகம்

பிலிப்பின்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

DIN

பிலிப்பின்ஸில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வுமைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது: தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள டுடுபிகனுக்கு அருகே செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு சாமர் மாகாணத்தில் உள்ள சான் ஜூலியன் டவுனை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது என அந்த மையம் தெரிவித்துள்ளது. 
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.5 அலகுகள் என உள்ளூர் வல்லுநர்கள் கணித்திருந்த நிலையில்,  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 6.4 அலகுகள் என மதிப்பிட்டுள்ளது. இப்புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.
பலி எண்ணிக்கை உயர்வு: திங்கள்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளதாக பிலிப்பின்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT