உலகம்

இலங்கையில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பெண்; மற்றொருவர் யுகே, ஆஸ்திரேலியாவில் படித்தவர்

ENS


இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தற்கொலைப் படையாக செயல்பட்டவர்களில் ஒருவர் பெண் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.

இலங்கை குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 359 ஆக உயர்ந்ததாகக் கூறிய அவர், தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பற்றிய சில விஷயங்களை மட்டும் வெளியிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இங்கிலாந்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஆஸ்திரேலியா சென்று அங்கு முதுகலை பட்டம் பெற்று, இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்.

மொத்தம் 7 தற்கொலைப் படை வீரர்கள் இந்த தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். தொடர் குண்டு வெடிப்புக்குத் தலைமை தாங்கிய நடத்தியவனும் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளான் என்று ருவான் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT