உலகம்

இலங்கையின் நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு 

DIN

கொழும்பு: இலங்கையின் நுவரெலியா நகரில் உள்ள ஹவேலியா பகுதியில் வியாழனன்று 200 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 359 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 58 பேரைக் கைது செய்துள்ளனர். 18 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.  மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது

அத்துடன் குண்டு வெடிப்புக்கு மறுநாள் திங்களன்று நடைபெற்ற தொடர் சோதனையில் இலங்கை  சர்வதேச விமான நிலையம், கொழும்பு மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட சில  இடங்களில் வெடிக்காத குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன    

இந்நிலையில் இலங்கையின் நுவரெலியா நகரில் உள்ள ஹவேலியா பகுதியில் வியாழனன்று 200 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முன்னதாக இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் வியாழனன்று கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

இத்தகைய சம்பவங்கள் அங்கு பதற்றத்தை அதிகரித்து வருகின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT