முகப்பு
உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகள் 'திடீர்' கைது 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:45 AM
பகிர்:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப், நிதி மோசடி வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் லோக்பத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தை நவாஸ் ஷெரீப்பை காணச்செல்லும் வழியில், மரியம் நவாசை பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை முகமை (NAB) அதிகாரிகள் கைதுசெய்தனர். 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ள அதிகாரிகள், கைதுக்கு பின்னர் அவரை லாகூர் கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.