உலகம்

இந்தியா-பூடான் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து

DIN

இந்தியா-பூடான் இடையே விண்வெளி ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின. பூடானில் அந்நாட்டுப் பிரதமர் லோதே ஷேரிங்- பிரதமர் நரேந்திர மோடி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை பூடான் சென்றார். தலைநகர் திம்பு சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பூடானின் பழமையான மடாலயமான சிம்தோகா ஜோங்கில் அந்நாட்டுப் பிரதமர் லோதே ஷேரிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், விண்வெளி ஆராய்ச்சி, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி உள்ளிட்ட துறைகளில் 10 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதைத் தொடர்ந்து, மாங்க்டெச்சு நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், நீர்மின் உற்பத்தியில் இந்தியா-பூடான் இடையே 50 ஆண்டுகால ஒத்துழைப்பை நினைவுகூரும் விதமாக சிறப்பு அஞ்சல் தலையை அவர் வெளியிட்டார்.

ரூபே கார்டு அறிமுகம்: அதன் பிறகு, ரூபே கார்டு பரிவர்த்தனை அட்டையை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அந்த அட்டையைப் பயன்படுத்தி இனி பூடானில் பொருள்களை வாங்க முடியும். பின்னர், மோடியும், ஷேரிங்கும் இணைந்து இஸ்ரோ உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள புவி அறிவியல் மற்றும் செயற்கைக்கோள் கட்டமைப்பு வசதியை திறந்து வைத்தனர்.

பின்னர், இவருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் மோடி கூறியிருப்பதாவது:

கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ராயல் பூடான் பல்கலைக்கழகமும், இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐஐடி) இணைந்து செயல்படும் என்று மோடி கூறினார்.

அதைத் தொடர்ந்து, பூடான் பிரதமர் ஷேரிங், அந்த அறிக்கையில் கூறுகையில், "இந்தியா-பூடான் இடையேயான உறவு மிகவும் நெருக்கமானது. இது, இரு நாடுகளும் அருகருகே இருப்பதால் அல்ல; திறந்த மனதோடு இரு நாடுகளும் அணுகுவதால் ஏற்படுகிறது என்றார் ஷேரிங். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT