உலகம்

பாக். ராணுவ தலைமைத் தளபதியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு

DIN


பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பிராந்திய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு அவரது பதவிக்காலத்தை பிரதமர் இம்ரான் கான் நீட்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக கமர் ஜாவேத் பாஜ்வா (58) நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம், இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையவிருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ராணுவ தலைமைத் தளபதி ஜாவேத் பாஜ்வாவின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடையும் தேதியில் இருந்து, அடுத்த 3 ஆண்டுகளுக்கும் அவரே ராணுவ தலைமைத் தளபதியாக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை பிரதமர் இம்ரான் கான் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டுப் பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்துள்ளது. இந்நிலையில், பாஜ்வாவின் பதவிக் காலத்தை நீட்டித்து இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில், ராணுவ தலைமைத் தளபதி, பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை. ராணுவ தலைமைத் தளபதியை நியமிக்கும் அதிகாரம் அந்நாட்டுப் பிரதமரிடமே உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT