உலகம்

இத்தாலி பிரதமர் ராஜிநாமா

DIN


ஆளும் கூட்டணியில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜியுசெப்பே கான்டே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் புதிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூட்டணிக் கட்சியான தேசியவாத லீக் கட்சியின் தலைவர் மேட்டியோ சால்வினி மீது அவர் குற்றம் சாட்டினார்.
அந்த நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு தேசியவாத லீக் கட்சி தலைமையிலான கூட்டணி அமைக்கப்பட்டு, அனைவருக்கும் பொதுவாக ஜியுசெப்பே கான்டே பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும், அவருடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று கூறிய சால்வினி, கான்டேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்தச்சூழலில், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக பிரதமர் ஜியுசெப்பே கான்டே அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT