உலகம்

நியூஸிலாந்தில் எரிமலை வெடிப்பு: 100 பேர் சிக்கியிருப்பதாக தகவல்

DIN

நியூஸிலாந்தின் வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை திங்கள்கிழமை வெடித்துச் சிதறியது. அந்த சமயம் வைட் தீவில் மட்டும் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்கு மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும் அங்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா உத்தரவிட்டுள்ளார்.

இதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நியூஸிலாந்தின் வைட் தீவு, அதிக எரிமலைகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். அங்குள்ள எரிமலைகளை பார்வையிட, ஒவ்வொரு வருடமும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT