உலகம்

தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்! 

DIN

தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி  (Zozibini Tunz) 2019-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 26.

அட்லாண்டாவில் நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி 2019 மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டுள்ளார்.  இவர் மிஸ் சவுத் ஆஃப்ரிகாவாகவும் பட்டம் வென்றவர்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற மூன்றாவது கறுப்பின பெண்மணி இவர். லீலா லோபஸ் என்பவர் 2011-ம் ஆண்டு முதன் முதலாக பிரபஞ்ச அழகியான முதல் கருப்பினப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்ஸிகோவைச் சேர்ந்த சோபியா அரகன் மூன்றாவது இடத்திலும், புவேர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் ரன்னர்-அப்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த வர்திகா சிங் இப்போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் முதல் 20 இடத்தை நெருங்கியிருந்தாலும், வெற்றி பெறவில்லை. மிஸ்யூனிவர்ஸ் சோசிபினி துன்சிக்கு உலகம் முழுவதும் பல தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT