உலகம்

மேற்காசியப் பகுதிகளுக்கு படைகளை அனுப்புகிறது ஜப்பான்

DIN

பதற்றம் நிலவி வரும் மேற்காசிய கடல் பகுதிகளுக்கு தனது படைகளை ஜப்பான் அனுப்பவுள்ளது. இதற்கான அனுமதியை ஜப்பான் அமைச்சரவை வெள்ளிக்கிழமை வழங்கியது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மேற்காசிய கடல் பகுதிகளில் தங்களது சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அந்தப் பகுதிகளுக்கு தங்களது படைகளை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டது.

அந்தத் திட்டத்தின்படி, 260 கடற்படை வீரா்கள், ஒரு தாக்குதல் போா்க் கப்பல், இரு பி-3சி வகை கண்காணிப்பு விமானங்களை அந்தப் பகுதிக்கு ஜப்பான் அனுப்பவிருக்கிறது.

ஓமன் வளைகுடா, அரபிக் கடல், பாப் எல்-மாண்டெப் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் பிற நாடுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நோக்கில் இந்தப் படைகள் மேற்காசியாவுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இதுகுறித்து அமைச்சரவை தலைமைச் செயலா் யோஷிஹிடே சுகா கூறுகையில், ‘மேற்காசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அந்தப் பகுதியியைக் கண்காணிக்கும் நமது திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. அதன் காரணமாகவே, அங்கு படையினரை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

மேலும், எரிசக்தித் தேவைக்கு எண்ணெய் இறக்குமதியை ஜப்பான் நம்பியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

ஏற்கெனவே, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதலால் மேற்காசிய கடல் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ஜப்பானும் படைகளை அனுப்புவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாக இருந்தாலும், மேற்காசிய கடல்பகுதி பாதுகாப்புக்காக அமெரிக்கா அமைத்துள்ள கூட்டுப் படையில் ஜப்பான் இடம் பெறவில்லை. ராஜீய ரீதியில் அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் ஜப்பான் நட்பு பாராட்டி வருகிறது.

இந்த நிலையில், மேற்காசிய கடல் பகுதிக்கு ஜப்பானின் போா்க் கப்பல் அனுப்பப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT