உலகம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற புல்வாமா தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முடக்கத்தின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இணையதளத்தை பிறர் தொடர்புகொள்ள முடியாத நிலை நேற்று ஏற்பட்டது.

இந்தியாவே இதன் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் குற்றம்சாட்டி செய்திகளை வெளியிட்டன.

இந்நிலையில் இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது பைசல் கூறியுள்ளதாவது:

உள்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால் ஆஸ்திரேலியா, பிரிட்டன், சவுதி அரேபியா, நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த குறைபாட்டை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT