உலகம்

வங்கியில் கொள்ளை: அமெரிக்காவில் 2 சிறுமிகள் கைது

DIN

ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வங்கியில் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  
இதுகுறித்து பால் ரிவர் போலீஸார் கூறியதாவது: பால் ரிவர் நகரிலுள்ள பேகோஸ்ட் வங்கிக் கிளையில் புதன்கிழமை மாலை புகுந்த 14 வயது சிறுமி, திடீரென துப்பாக்கியை காட்டி, வங்கியில் இருந்த அனைவரையும் மிரட்டினார். பின்னர், வங்கியின் காசாளரிடம் சென்று பணத்தை எடுத்து தருமாறு கூறி, 

துப்பாக்கியை காட்டி மிரட்டினார். அவரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்த அந்தப் பெண் வங்கியைவிட்டு வெளியே வந்து, தயாராக நின்றிருந்த காரில் ஏறிச் சென்றார். அந்தக் காரை 15 வயதுடைய மற்றொரு பெண் ஓட்டிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். 
வங்கிக்கு வெளியே பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்ட போலீஸார் அந்தக் காரின் பதிவெண்ணைக் கொண்டு புலன் விசாரணை நடத்தினர். 
பின்னர் அந்தப் பெண்கள் வசித்த இடத்தை அடைந்து, இருவரையும் கைது செய்தனர். வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.  ஆனால், அவ்விரு பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிட மறுத்துவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT