உலகம்

அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி அவசர நிலையை பிரகடனம் செய்வேன். ட்ரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் கொலைகள் நிகழ்வது தொடர்ந்தால், எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. 

DIN

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் கொலைகள் நிகழ்வது தொடர்ந்தால், எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ நாட்டு  எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார், அதற்காக ரூ.39,693 கோடி (5.7 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.

ஆனால் அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. இதன் காரணமாக ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 18 நாட்களாக அமெரிக்காவில் பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் கொலைகள் நிகழ்வது தொடர்ந்தால், எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக செவ்வாயன்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய போது அவர் கூறியதாவது:-

அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளி நாட்டினர். மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்களை நம் நாட்டுக்குள் கடத்தி வருகின்றனர். இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் ஒப்புதல் தர மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என அவர்கள்  எதிர்பார்க்கின்றனர்?

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் கொலை சம்பவங்கள் நிகழ்வ்து தொடந்தால், எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்.

அதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை பாராளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி மும்பையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

SCROLL FOR NEXT