உலகம்

இந்தியாவுடனான நல்லுறவுக்கு அதிபர் டிரம்ப் முக்கியத்துவம்

DIN

இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அதிமுக்கியத்துவம் கொடுத்து வருவதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா தெரிவித்துள்ளார்.
 அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை வெள்ளிக்கிழமை சந்தித்து தனது நியமனக் கடிதத்தை அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்தியத் தூதராகப் பொறுப்பேற்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் ஷ்ரிங்கலா பேசியதாவது:
 கடந்த சில ஆண்டுகளில், இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேம்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
 இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவுக்கு அதிபர் டிரம்ப் அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் அண்மையில் தொலைபேசியில் உரையாடினார். அதுபோன்று, கூடிய விரைவில் மீண்டும் உரையாட ஆவலாக உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
 இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகள் அளித்து வரும் ஒத்துழைப்பு குறித்தும், உலக அளவிலான விவகாரங்களில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒற்றுமை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
 இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதாரத் தொடர்பு, வணிகத் தொடர்பு, பாதுகாப்பு, எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவற்றை மேம்படுத்த அதிபர் டிரம்ப் உறுதியளித்தார் என்றார். ஷ்ரிங்கலா இதற்கு முன்பு வங்கதேசத்துக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT