உலகம்

ஆப்கான் பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் சாவு

DIN

ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்துக்கு அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்துக்கு வெளியே தேர்வுக்காக மாணவர்கள் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர். அப்போது பல்கலைக்கழகத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்தது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

அங்கு தலிபான் பயங்கரவாதிகள் பல இடங்களைக் கைப்பற்றி கடந்த 17ஆண்டுகளாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதுமட்டுமன்றி, அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் மீதும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்நாட்டில் தற்போது ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுருவலும் அதிகரித்து வருகிறது. 

தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆப்கன் அரசு ஈடுபட்டு வருகிறது. எனினும் இதுவரை எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT