உலகம்

பணப்பரிமாற்ற முறைகேடு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கைது

IANS


இஸ்லாமாபாத்: போலியான வங்கிக் கணக்குகள் வைத்திருந்த வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டார்.

போலி வங்கிக் கணக்குகள் மூலம் பணப்பரிமாற்ற முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு இன்று நடவடிக்கை எடுத்தது.

2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் ஆசிஃப் அலி ஜர்தாரி. இவர் பெனாசிர் பூட்டோவின் கணவரும் ஆவார்.

முன் ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று ஜர்தாரி தரப்பில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜர்தாரி, இன்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT