உலகம்

அதிபர் தேர்தலில் வெளிநாடுகளின் உதவியைப் பெறுவதில் தவறில்லை: டிரம்ப் சர்ச்சை கருத்து

DIN


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் குறித்து வெளிநாடுகள் அளிக்கும் தகவல்களைப் பெறுவதில் தவறேதுமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியாவின் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிரம்ப்பின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு டொனால்ட் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது, அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் குறித்து சீனாவோ, ரஷியாவோ தகவல் ஏதும் அளித்தால், அதைப் பெற்றுக் கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 
தவறேதும் இல்லை: அதற்குப் பதிலளித்த டிரம்ப், இந்தக் கேள்வியை எழுப்புவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அந்தத் தகவல்களைப் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என்றே கருதுகிறேன். அது அதிபர் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு என்று கூறிவிடமுடியாது. அந்நாடுகள் குறிப்பிட்ட தகவல்களை வைத்துள்ளன. அதை நான் பெற்றுக்கொள்கிறேன். அவ்வளவுதான். இதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றினால், அது குறித்து புலனாய்வுத் துறையிடம் (எஃப்.பி.ஐ.) முறையிடுவேன் என்றார். 
அதிபர் டிரம்ப்பின் கருத்துக்கு ஜனநாயகக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஜோ 
பிடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இது வெறும் அரசியல் சார்ந்த விவகாரம் மட்டுமல்ல; அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல். 
ஜனநாயக ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்பவர்களின் உதவியை நாட்டின் அதிபர் கோரக் கூடாது. அது குற்றச்செயலுக்கு உடந்தையாக இருப்பது போல் ஆகும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT