உலகம்

எத்தியோப்பியா: ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு 37 பேர் பலி

DIN


வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு, அந்த நாட்டின் பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் 37 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்த மாகாண ஆளுநர் ஆஷாத்லி ஹùஸன் புதன்கிழமை கூறியதாவது:
அம்ஹாரா மாகாண ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அங்கு கடந்த சனிக்கிழமை 
நடைபெற்ற தாக்குதலின் தொடர்ச்சியாக, பெனிஷான்குல்-குமுஸ் மாகாணத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அம்ஹாரா மாகாண தாக்குதலுக்குத் தலைமை வகித்த அசாமிநியூ சிகேவின் ஆள்கள்தான் இந்தத் தாக்குதலையும் நடத்தியதாக நம்பப்படுகிறது.
மெடாகல் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர். 
தாக்குதல் நடத்திய அந்தக் கும்பல் அம்ஹாரா மாகாணத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டது என்றார் அவர்.
முன்னதாக, எத்தியோப்பிய ராணுவ தலைமைத் தளபதி சியாரே மெகோனெனும், அந்த நாட்டின் அம்ஹாரா மாகாண ஆளுநர் அம்பாச்யூ மெகோனெனும் வெவ்வேறு சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அம்ஹாரா மாகாண அரசைக் கவிழ்க்கவும், அதன் தொடர்ச்சியாக எத்தியோப்பிய அரசைக் கவிழ்க்கவும் அசாமிநியூ சிகே தலைமையிலான ஆயுதக் குழு இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக நம்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT