உலகம்

பிரெஞ்ச் ஃபிரைட்: பிரான்ஸை வாட்டி வதக்கிய வெப்பம்! 113 டிகிரியை தொட்டது!!

பிரெஞ்ச் பிரைட் என்றொரு உணவுப் பண்டம் இருக்கிறது. இன்று இப்படி ஒரு நிலை வரும் என்று தெரிந்து அன்றே அந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதோ என்று நினைக்கும் அளவுக்கு பிரான்ஸை கடுமையான கோடை வெப்பம் வாட்டி வதக்கியு

ENS


பிரெஞ்ச் பிரைட் என்றொரு உணவுப் பண்டம் இருக்கிறது. இன்று இப்படி ஒரு நிலை வரும் என்று தெரிந்து அன்றே அந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதோ என்று நினைக்கும் அளவுக்கு பிரான்ஸை கடுமையான கோடை வெப்பம் வாட்டி வதக்கியுள்ளது.

பிரான்ஸில் நேற்று 113 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஏற்கனவே, கடுமையான கோடை வெப்பத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கோடை வெப்பமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

மத்திய ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. உடனடியான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவாக பிரான்ஸில் 45.9 டிகிரி செல்சியஸ் (114.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை அதிகபட்ச வெப்பமாக 2003ம் ஆண்டு இதேப் பகுதியில் 44.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

இதுபோன்றதொரு வெப்பத்தை பார்த்ததே இல்லை என்கிறார்கள் பிரான்ஸ் மக்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT