உலகம்

முதல் "செல்ஃபி' படம் அனுப்பியது இஸ்ரேலின் நிலவு ஆய்வுக் கலம்

DIN

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டு தனியார் நிறுவனம் அனுப்பியுள்ள பெரஷீத் ஆய்வுக் கலம், தன்னைத் தானே எடுத்துக் கொண்ட கைப்படத்தை (செல்ஃபி) முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் பெரஷீத் ஆய்வுக் கலம், தன்னைத் தானே எடுத்துக் கொண்ட படத்தை 37,600 தொலைவிலுள்ள இஸ்ரேலின் யேஹுத் ஆய்வு மையத்துக்கு அனுப்பியுள்ளது.
பெரஷீத் ஆய்வுக் கலனின் ஒரு பகுதி தெரியும் அந்த கைப்படத்தின் பின்னணியில், பூமி இடம் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலில் உருவாக்கப்பட்ட "பெரஷீத்' என்ற விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து  கடந்த மாதம் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
585 கிலோ எடையுடைய அந்த விண்கலம், அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம், இஸ்ரேலின் ஸ்பேஸ்-ஐஎல் என்ற லாப நோக்கற்ற தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். அந்த வகையில், நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட முதல் இஸ்ரேலிய விண்கலம் என்பதுடன், அத்தகைய ஆய்வை மேற்கொள்ளவிருக்கும் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையையும் பெரஷீத் பெறுகிறது. இந்த நிலையில், அந்த விண்கலம் தன்னைத் தானே எடுத்துக் கொண்ட படத்தை தற்போது பூமிக்கு அனுப்பியுள்ளது.
7 வார பயணத்துக்குப் பிறகு பெரஷீத் விண்கலம் அடுத்த மாதம் 11-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT