முகப்பு
உலகம்

உலகின் மிக வயதான ஜப்பானியப் பெண்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்

உலகின் மிக வயதான  பெண்மணி என்ற சாதனையைப் படைத்த ஜப்பானின் 116 வயது கனே டனகா கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Updated On : 9 மார்ச், 2019 at 3:33 PM
பகிர்:


டோக்யோ : உலகின் மிக வயதான  பெண்மணி என்ற சாதனையைப் படைத்த ஜப்பானின் 116 வயது கனே டனகா கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஜப்பானின் தென்மேற்கு நகரான ஃபுகுவோகாவில் உள்ள நர்சிங் ஹோமில் வசித்து வரும் கனே டனகாவிடம், கின்னஸ் சாதனை நிறுவன அதிகாரிகள், அதற்கான சான்றிதழை வழங்கி கௌரவித்தனர். விழாவின் போது அவரது குடும்பத்தினரும், மாகாண மேயரும் உடன் இருந்தனர்.

டனகா 1903ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்தார். தனது பெற்றோருக்கு 8 குழந்தைகளில் 7வது மகளாகப் பிறந்தார். இவருக்கு ஹிட்யு டனகா என்பவருடன் 1922ம் ஆண்டு திருமணமாகி 4 குழந்தைகள் பிறந்தன. 1 குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர்.

Advertisement

இவரது பொழுதுபோக்கு கணிதம் பயில்வதாம். தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்து தனது அன்றாடப் பணிகளை செய்து முடித்து விடும் வழக்கம் கொண்டவர்.

இதன் முன் அதிக வயதுடைய பெண்மணியாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சியோ மியாகோ கடந்த ஜூலை மாதம் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார். தற்போது மிக வயதான ஆடவர் என்ற பெருமையையும் ஒரு ஜப்பானியர்தான் தக்க வைத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.