உலகம்

ஆப்கான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 6 பேர் சாவு

DIN

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜமால் மினா எனுமிடத்தின் அருகே காலை 9:30 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதையடுத்து கார்த்-இ-சாகி எனுமிடத்தில் அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் இதற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT