உலகம்

உக்ரைன் மக்களுக்கு ரஷிய குடியுரிமை: சர்ச்சைக்குரிய சட்டத்தில் புதின் கையெழுத்து

DIN


உக்ரைனைச் சேர்ந்தவர்களுக்கு விரைவில் ரஷிய குடியுரிமை அளிக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தில் அதிபர் விளாதிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதவது:
உக்ரைன் மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக புதின் கையெழுத்திட்ட புதிய சட்டம், அரசாணையில் புதன்கிழமை வெளிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, உக்ரைனைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரும் ரஷியக் குடியுமை பெறுவதற்கு சுலப வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே, ரஷியாவில் தங்கியிருப்பதற்கான உரிமம் பெற்ற உக்ரைன் நாட்டவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் நாட்டவர்கள் ரஷிய குடிமக்களாவதை எளிமையாக்கும் இந்தச் சட்டம், ஏற்கெனவே ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று கவலை தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT