உலகம்

வடகொரியா 'திடீர்' அணு ஆயுதச் சோதனை!

ANI

அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியா, அமெரிக்காவுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

அடையாளம் தெரியாத குறைந்த தூரம் (70 முதல் 200 கிலோ மீட்டர் தூரம்) சென்று தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா, சனிக்கிழமை சோதனை செய்துள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அந்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள வோன்ஸன் என்ற நகரத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9:06 மணியளவில் கிழக்கு நோக்கி இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியாவின் இந்த அணு ஆயுதச் சோதனையின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக தென் கொரிய மற்றும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியா, அமெரிக்காவுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக இப்படிப்பட்ட நடவடிக்கையில் அந்நாடு இறங்கியுள்ளதாக தெரிகிறது. கடைசியாக 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வட கொரியா இப்படி ஏவுகணையை நடத்தியுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, ஏவுகணைகளை ஏவப் பயன்படுத்தப்படும் சோஹே ஏவுதளத்தை வடகொரியா சீரமைத்து வருவது செயற்கைக்கோள் படத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க அரசின் ஆலோசனை அமைப்பான சிஎஸ்ஐஎஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT